Jul 26, 2013

1 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை


டிஸ்கி : உலக சினிமா பாக்கற நண்பர்கள் தயவுசெய்து இங்கனயே கழண்டுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


உங்களுக்கு சயின்ஸ் பிக்சன் படங்கள்னா ரொம்ப பிடிக்குமா ? அதுலயும் குறிப்பா டைம் ட்ராவல் பத்தின படங்கள்னா பிடிக்குமா ? அல்லது டைம் ட்ராவல் மாதிரியான சம்பவங்களைக் கொண்ட படம்னா பிடிக்குமா ?

இதுக்கெல்லாம் உங்க பதில் ஆமான்னா, இந்தபதிவு உங்களுக்காண்டி தான். (இல்லைனாலும் நீங்க படிச்சிதான் ஆகனும்..நோ எஸ்கேப்பு..) நான் முதல் முதலா பாத்த டைம் ட்ராவல் படம் "பேக் டு த ஃப்யூச்சர்". அப்போலாம்(10th Std) ஹாலிவுட் படங்கள தமிழ் டப்பிங்ல மட்டும் தான் பாப்பேன். ஏன்னா அப்போ இங்கிலிபீசுன்னா நமக்கு கொஞ்சம் அலர்ஜி (இப்போ மட்டும் ???!!!) . இந்தப் படத்தோட பேரு ரொம்ப வித்தியாசமா இருக்க, இந்த டிவிடிய வாங்கிட்டு வந்துட்டேன். முதல் பார்ட் பாத்துட்டு அப்டியே ஆச்சரியத்துல வாயடச்சுப் போயிட்டேன். அந்தக்காலத்துலயே எப்டிலாம் யோசிச்சு எடுத்துருக்காய்ங்கனு ஒரே ஆச்சரியம்.

அப்பறம் தொடர்ந்து அடுத்த ரெண்டு பாகமும் பாத்தேன். அப்பறம் டைம் ட்ராவல் படங்களா தேடி தேடி பாத்தேன். உண்மைய சொன்னா, எனக்கு ஹாலிவுட் படங்கள் மேல ஒரு ஈர்ப்பு வர்றதுக்கு டைம் ட்ராவல் படங்கள் தான் முக்கிய காரணம். படங்கள் மட்டுமில்ல அது பத்தின ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைச்சாலும் விடுறதில்ல. அப்டி ஒரு ஆர்வம் டைம் ட்ராவல் பத்தி. நிறைய தியரிகள்லாம் படிச்சுருக்கேன். அதலாம் இங்க சொல்லிட்டு இருந்தா அப்புறம் எனக்கு டாக்குடர் பட்டம் கொடுக்கனும்னு, நிறைய யுனிவெர்சிட்டிஸ் தொந்தரவு பண்ணும்ங்கற ஒரே காரணத்துனால சொல்லாம விடுறேன். பேசிக்கலி ஐ ஃபீல் ஷை யு நோ ?!! (டயலாக் உபயம்:கொழந்த அண்ணன்)

டைம் ட்ராவல் பத்தின படங்கள கீழ்க்கண்ட விதங்கள்ல பிரிக்கலாம்.
1.முழுக்க முழுக்க டைம் ட்ராவல் பத்தினது - Back to the Future Series, The Time Machine
2.படத்தின் ஒரு பகுதி மட்டும் டைம் ட்ராவல் - The Family Man, 13 Going on 30, etc.
3.டைம் ட்ராவலர்கள் பற்றி மட்டும் - Terminator, Twelve Monkeys, etc.
4.பேரலல் யுனிவர்ஸ் பற்றிய படங்கள் - Donnie Darko, Primer, etc.

அதே போல டைம் ட்ராவல்லயே வித விதமான ஜானர்ல படங்கள் இருக்கு. காமெடியிலருந்து, த்ரில்லர் வரைக்கும் அத்தனை ஜானர்கள்லயும் டைம் ட்ராவல் கான்சப்ட் வச்சு படம் வந்துருக்கு. ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதத்துல வியக்க வைக்கும். அப்பிடி இதுவரைக்கும் நான் பாத்த டைம் ட்ராவல் படங்கள பகிர்ந்துக்கனும்னு நினச்சதால தான் இந்த பதிவு. இதையே ஒரு தொடர்பதிவா மாத்திரலாம்னு உள்ளுக்குள்ள ஒரு ஓசனை. (ஓடுங்க..ஓடுங்க.. ஒரு தொடர்பதிவு நம்மள நோக்கி வருது..எல்லாரும் ஆழமான பகுதிய நோக்கி ஓடுங்க குப்புற படுங்க - அப்டிலாம் எஸ்கேப்படிச்சாலும் நான் விடறதா இல்ல) இந்த மாபெரும் பதிவுலக எழுத்தாளுமையின் தொடர்பதிவை வெளியிட சொல்லி Times போன்ற பல ஆங்கில இதழ்கள் என்னோட வீட்டு வாசப்படியிலேயே உக்காந்து கெஞ்சினாலும், தலைகீழாகத்தான் குதிப்பேன்னு உங்களுக்காண்டி நான் இங்க எழுதிகினு இருக்கேன். (அட போதும்பா..அதுக்காண்டி நாளைய ஜனாதிபதியேனா புகழ்றது ?!!)

சரி படங்கள பத்தி பாக்கப்போறதுக்கு முன்னாடி ஒரு முன்னோட்டம் மாதிரி டைம் ட்ராவல் படங்கள் வகையை பத்தி பாத்துருவோம். (இந்த பகுதி நெட்லருந்து சுட்டதுதான். கொஞ்சம் விக்கில இருந்தும் சுட்டுருக்கேன். தமிழ்ல மொழிபெயர்த்தது மட்டுமே என்னோட வேலை.. ஆனா உதாரணம்லாம் என்னுது சாமி.. சொந்தமா நானே யோசிச்சது..!!??)


1.Fixed Timeline:

ஒரே வரில சொல்லனும்னா கடந்த காலத்தை எந்த காரணத்த கொண்டும் மாத்த முடியாது. நீங்க டைம் ட்ராவல் பண்ணி கடந்த காலத்துக்கு போய் ஆல்ரெடி நடந்த விஷயம் ஒன்ன மாத்தனும்னு நினச்சா அது முடியாது. அப்பிடியே மாத்துனாலும் அது ஆல்ரெடி நடந்த ஒரு விஷயமாதான் இருக்கும். ஏன்னா இங்க ஒரே ஒரு ஃபிக்ஸ்டு டைம்லைன் தான். நீங்க முன்னும் பின்னும் போய்ட்டு வரலாம் (அதுவே ஆல்ரெடி நடந்ததா தான் இருக்கும்). ஆனா நடந்த சம்பவங்களை மாத்த முடியாது.

உதாரணத்துக்கு, சுபாஷ் சந்திரபோஸ் எப்பிடி இறந்தார்னு இதுவரை மர்மமாவே இருக்கு. அவரு சாகலை இன்னும் உயிரோட தான் இருக்கார்னு சில பேரு சொல்லறாங்க. இல்ல அவரு ப்ளேன் க்ராஷ்ல இறந்துட்டார்னும் சில பேரு சொல்லறாங்க. அது என்னனு தெரிஞ்சுக்கனும்னு உங்களுக்கு ரொம்ப ஆர்வம். அவர ப்ளேன் க்ராஷ்ல இருந்து காப்பாத்தனும்னு நினைக்கறீங்க. அதனால டைம் ட்ராவல் பண்ணி சுபாஷ் காலத்துக்கு போறீங்க. அங்க அவரு ஏறுற அதே ப்ளேன்ல நீங்களும் ஏறுறீங்க. ப்ளேன் வெடிக்கிற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவர உங்களோட டைம் ட்ராவல் பண்ண வச்சு நிகழ்காலத்துக்கு(2013) கூட்டிட்டு வந்துடறீங்க. ப்ளேன் க்ராஷ்ல மத்தவங்க எல்லாம் இறந்துடறதால சுபாஷ் தப்பிச்சது யாருக்கும் தெரியலை. அதனால அவரும் அந்த ப்ளேன்ல இறந்துட்டார்னு கொஞ்ச பேரு சொல்லறாங்க. ஆனா அவரு பாடி கிடைக்காததுனால கொஞ்ச பேரு அவரு தப்பிச்சுட்டாருனு சொல்லறாங்க. இந்த செய்திகள 2013ல உங்களோட சேர்ந்துகிட்டு 48 வயசு சுபாஷ் படிச்சுகினு இருப்பாரு.

இப்போ நீங்க நினச்சபடி சுபாஸ காப்பாத்தியாச்சு. ஆனா நீங்க டைம்லைன்ல எதயுமே மாத்தல. நீங்க காப்பாத்துனது ஆல்ரெடி நடந்த ஒரு விஷயம் தான். 1945ல இருந்து 2013 வரைக்கும் உள்ள மக்களுக்கு சுபாஸ் சந்திரபோஸ் ஒரு மர்மம் தான். (யாரு கண்டா அந்த மாதிரி இனிமே நடந்தாலும் நடக்கலாம்). ஆனா இந்த கொள்கைப்படி பாத்தா மொத்த டைம்லைனுமே ஆல்ரெடி நிர்ணயிக்கப்பட்ட ஒரு விஷயம். அல்லது விதினு சொல்லலாம். அந்த ஒரு டைம்லைனை சார்ந்துதான் உலக மக்கள் அத்தனை பேரும் இருக்காங்க. 1945ல சுபாஸ் ப்ளேன்ல ஏறுவதும், நீங்க 2013ல டைம் ட்ராவல் பண்ணுவதும், அவரை காப்பாத்தி கூட்டி வருவதும் முன்னாடியே நிச்சயிக்கப்பட்டாச்சு. இதுதான் முதல் வகை.

2.Flexible Timeline:

அடுத்தது, மாறுபடக்கூடிய டைம்லைன். இது அப்டியே மேல சொன்னதுக்கு நேர் எதிரானது. நீங்க கடந்த காலத்துக்கு போயி எந்த விஷயத்த வேணும்னாலும் மாத்திக்கலாம். இங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டைம்லைன் இருக்கும். உங்களுக்குனும் தனியா ஒரு டைம்லைன் இருக்கும். இப்போ கடந்த காலத்துக்கு போயி எதயாவது மாத்துறீங்கன்னா அது தொடர்பான அத்தனை டைம்லைனும் மாறிடும். உங்க வாழ்க்கைல நடந்த ஒரு சம்பவத்த மாத்துறீங்கன்னா உங்க டைம்லைனோட சம்பந்தப்பட்ட உங்க அம்மா, அப்பா, மனைவிகள், காதலிகள், குழந்தைகள் அத்தனை பேரோட டைம்லைனும் மாறும். சில சமயம் அந்த மாறுதலுக்கு பிறகு மறுபடியும் நிகழ்காலத்துக்கு வர முடியாம போயிடும். இன்னும் கேயாஸ் தியரி அப்டி இப்டினு போனா ரொம்ப காம்ப்ளிகேட்டடா ஆயிரும். ஆகையினால இத்தோட விட்ருவோம்.

இதுக்கு உதாரணம், இப்போ உங்களுக்கு 25 வயசு. 5 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு உங்கள லவ் பண்றேன்னு உங்க பின்னாடியே சுத்தியிருக்குது(!!!?????@@#$%^^&???). ஆனா வாயில விரல வச்சா கூட சூப்ப தெரியாத பச்ச புள்ளயா இருந்தாங்காட்டி, அவள வேணாம் போடினு அடிச்சு விரட்டிடுறீங்க. அப்புறம் 5 வருஷம் கழிச்சு இப்போ தான் உங்களுக்கு புத்தி வருது. நம்ம மூஞ்சிக்கு அதுவா வந்து லவ் பண்றேன்னு சொன்னப்பவே ஓக்கே பண்ணிருக்கனும்.. இப்போ ஒன்னும் தேற மாட்டிங்குதேனு ஒரே ஃபீலிங்கு. அதனால 5 வருஷத்துக்கு முன்னாடி அவள வேணாம்னு விரட்டுன சம்பவத்த மாத்த நினச்சு டைம் ட்ராவல் பண்ணி 5 வருஷம் முன்னாடி போறீங்க. போயி நீங்க 5 வருஷத்துக்கு முன்னாடி இருக்கற உங்ககிட்டயே எடுத்து சொல்லறீங்க. சரினு உங்களோட பாஸ்ட் வெர்சன் அந்த பொண்ண ஓக்கே பண்ணிடறான். இதனால உங்களோட நிகழ்காலத்து டைம்லைன் மாறி புதுசா வேற ஒரு டைம்லைனுக்கு வந்துடறீங்க. ஒன்னும் தேற மாட்டிங்குதே ஃபீலிங்குலாம் போயி தோசைக்கரண்டியால அடி வாங்குற ஃபீலிங்கு வந்துருக்கும். உங்களோட டைம்லைன் மாறுனதோட உங்க லவ்வரு டைம்லைனும் மாறியிருக்கும்.அம்புட்டுதேன்.

3.Alternative Timeline:

ஆல்டெர்னேட்டிவ் டைம்லைன். இப்போ நீங்க ஒரு கடந்த கால சம்பவத்தை மாத்துறீங்கன்னா, அது ஒரு புது டைம்லைனை உருவாக்கும். அந்த புதிய டைம்லைனுக்கு நீங்க போயிடுவீங்க. ஆனா நீங்க முன்னாடி இருந்த ஒரிஜினல் டைம்லைன் அப்பிடியே தான் இருக்கும். இது மூலமா எக்கசக்கமான டைம்லைன்கள உருவாக்கலாம். ஒருவருக்கே கூட லட்சக்கணக்கான டைம்லைன்கள உருவாக்கலாம்.

உதாரணம், உங்களுக்கு ஒரு பெரிய சினிமா இயக்குனராகனும்னு கனவு. ஆனா கதை எதுவும் சிக்க மாட்டிங்குது. கோலிவுட்ல வாய்ப்பு தேடி சிங்கியடிச்சு கிட்டுருக்கீங்க (சிங்கி - அப்டின்னா என்னங்க?). ஹாலிவுட் படத்த காப்பியடிக்கலாம்னு பாத்தா உங்க தன்மானம் உங்கள தடுக்குது. கருந்தேள் அண்ணன் மாதிரி யாராச்சும் கண்டுபிடிச்சு ஊரெல்லாம் கூட்டி, தோல உரிச்சு தொங்கப் போட்டிருவாய்ங்களோனு பயம். சரி காப்பியடிக்கறதயே நேக்கா நெளிவு சுளிவில்லாம, யாருக்கும் தெரியாம பண்ணலாம்னு நினைக்கறீங்க. அதுக்காண்டி இப்போ 2013ல இருந்து 1990க்கு போயிடறீங்க. உங்களுக்கு "Memonto" படத்தோட கதை நல்லா தெரியும். ஏன்னா நீங்க 2013லருந்து டைம் ட்ராவல் பண்ணி வந்ததால நோலன் 2000ல எடுத்த "Memonto"வோட கதை நல்லா தெரியும்.

உடனே அதயே ஒரு தயாரிப்பாளர்ட்ட கதையா சொல்லி சினிமாவா எடுத்துடறீங்க. அந்தப்படம் 1990கள்ல ஒரு பெரிய அதிர்ச்சியலையை ஏற்படுத்தி உங்கள தலை மேல வச்சு கொண்டாடறாங்க. அப்பிடியே அடுத்தடுத்து நிறைய சான்ஸ் கிடைச்சு பெரிய இயக்குனராயிடுறீங்க. இந்தக்கதை 1990ல நீங்க எடுத்துட்டதால, நோலனால அந்தபடம் எடுக்க முடியாது. வேற கதை கிடைக்காம அவரு ஒவ்வொரு ஸ்டுடியோவா சான்ஸ் தேடி அலையறாரு. ஏன் உங்ககிட்டயே கூட அசிஸ்டண்டா வரலாம். ( நோலன் ரசிகர்கள் மன்னிச்சூ!!)

ஆனா நீங்க உங்களோட கடந்த காலத்தை மாத்துனதால, புதுசா வேற ஒரு ஆல்டெர்னேட்டிவ் டைம்லைன உருவாக்கிட்டீங்க. ஆல்டெர்னேட்டிவ் டைம்லைன்ல தான் நோலன் உங்களோட அசிஸ்டண்ட். ஆனா நீங்க முன்னாடி இருந்த அந்த டைம்லைனுக்கு எந்த சேதாரமும் ஆகாது. அது அப்பிடியே தான் இருக்கும். நோலன் இன்டர்ஸ்டெல்லர் எடுத்துகினு இருப்பாரு. நீங்க வாய்ப்பு தேடி அலைஞ்சுகினே தான் இருப்பீங்க.

பெரிய பெரிய சயின்டிஸ்ட்கள்லாம் இந்த தியரிய ரொம்பவே நம்புறாங்க. அப்பிடி வேற ஒரு ஆல்டெர்னேட்டிவ் யுனிவெர்ஸ்ல ஆல்ரெடி டைம் ட்ராவல கண்டுபிடிச்சுட்டாங்கங்கறது அவங்களோட அனுமானம். அத நம்ம உணர முடியாததுக்கு காரணம் நம்மாள அந்த ஆல்டெர்னேட்டிவ் யுனிவெர்ஸ்க்கு போக முடியாதது தான். அப்பிடி போகறதுக்கு கருந்துளை (Worm Hole) ஒரு வழியா இருக்கலாம்னு கண்டுபிடிச்சுருக்காங்க. ஸ்ஸ்..யப்பா..இப்பவே கண்ண கட்டுதே..!! இதுக்கு மேல எயுதுனா நானே படிக்க மாட்டேங்கறதால வுடு ஜூட்டு..

உங்களுக்கு இன்னொரு மேட்டர் தெரியுமா ? நான் எதிர்காலத்துல(2020) எடுத்த படங்கள தான், நோலன் 2000லருந்து டைம் ட்ராவல் பண்ணி 2020க்கு வந்து பாத்துட்டு மறுபடி 2000க்கு வந்து படமா எடுத்துகிட்டு இருக்காரு தெரியும்ல.. இன்னொரு ஆல்டெர்னேட்டிவ் யுனிவெர்ஸ்ல நாந்தேன் நோலனுக்கு குரு.(அய்யோ..அம்மா..ஆஆ..எவன்டா அது.. வருங்கால ஜனாதிபதிய கல்ல விட்டு எறியறது??!!)

(அடுத்தடுத்த பாகங்களில் நான் இதுவரை பார்த்துள்ள வித்தியாசமான டைம் ட்ராவல் படங்களை பகிர்ந்துகொள்கிறேன். அதுவரை வணக்கம். நன்றி.(மாத்தி சொல்லிட்டேனோ?) சரி.. நன்றி. வணக்கம்.)
.தொடரும்-

16 comments:

  1. super machi ... I like time travels movies a lot ... then the three different kinds with ur examples semma ... 12 monkeys is also a good movie paaru ...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மச்சி..

      இப்பயாச்சும் ஒரு கமண்ட போடனும்னு தோணுச்சே..!! அப்பறம் நானும் உன்னய ஒரு 6 மாசமா எழுத சொல்லி சொல்லிட்டுருக்கேன்.. சரினு சொல்றயே தவிர அப்டியே எஸ்கேப் ஆயிட்டுருக்க..!! சீக்கிரம் எழுத ஆரம்பிடா..

      யாருக்கு தான் பிடிக்காது டைம் ட்ராவல் படம் ?!! 12 Monkeys பாத்தாச்சு.. அடுத்தடுத்த பதிவுகள்ல எழுதலாம்னு இருக்கேன்..!!

      Delete
  2. Very Very Intresting போஸ்ட் ஜி. உதாரணம் எல்லாம் அருமை. அடுத்து நல்ல படங்களை அறிமுக படுத்துங்க.
    ஆனா எனக்கு டைம் டிராவல் படங்கள்னாலே அலர்ஜி. இது வரைக்கும் எந்த டைம் டிராவல் படத்தையும் முழுசா பார்த்தது இல்ல. டைம் டிராவல் ரொம்பவே காதுல பூ சுத்துற சமாச்சாரம்னு ஆழமா மனசுல பதிஞ்சு போச்சு. மாத்திக்க முடியல.
    ஜி,
    ப்ளாக் ரீடரா ஒரு சின்ன suggestion. நீங்க பிராக்கெட்ல எழுதுற உங்களையே கலாய்ச்சு) வசனங்கள் புதுசா படிக்க வரவங்களுக்கு ஒரு மாதிரியான ஆயார்ச்சியை குடுக்கும். உங்களை நல்ல தெரிஞ்ச நண்பர்கள் ரசிப்பாங்க, பட் நம்ம blog படிக்கிறது 95% unknown ரீடர்ஸ் தான். :):):)

    ReplyDelete
    Replies
    1. தல,
      எனக்கு எல்லா விதமான ஜானர்களும் ரொம்ப பிடிக்கும். மனித உணர்வுகளைப் பேசுற படம் தான் மனசுல ரொம்ப நாள் நிக்கும். இருந்தாலும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறதுக்கு ஃபேண்டசி, காமெடி படங்கள் பாக்கறதில்லியா ? அந்த மாதிரி தான் இதுவும்.. டைம் ட்ராவல் காதுல பூ சுத்துற விஷயமா பல படங்கள்ல சொல்லியிருந்தாலும், சில படங்கள்ல அதுக்கு கரெக்டா விளக்கம் கொடுப்பாங்க. லாஜிக்கோட பாக்க முடியும். அது நல்லா இன்டெரெஸ்டா இருக்கும். (நான் இன்னும் சின்னப்பையன்-தாங்கறத அடிக்கடி மறந்துடறீங்க)

      அப்புறம் தல, அந்த பிராக்கெட் மேட்டர், நான் ஒரு விஷயம் நல்லா புரிஞ்சி வச்சுருக்கேன்.. நான் பிளாக் எழுத வந்துட்டதால எனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஆயிடாது. உண்மைல, படிக்கிற ரீடர்ஸ் நம்மள விட நிறைய தெரிஞ்சவங்களா இருப்பாங்க. எனக்கு டைமும் இன்டெரெஸ்டும் இருக்கறதால தான் எழுதுறேன். அதனால எனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுதுனா, படிக்கிறவங்களுக்கு கொஞ்சம் போராயிடும் கடுப்பாய்டுவாங்க. அத காம்ப்ரமைஸ் பண்ண தான் இந்த மாதிரி கலாய் டயலாக்ஸ். ஆனா அது இந்த போஸ்ட்ல ஓவர் டோஸாயிடுச்சுனு உங்க மூலமா தெரிஞ்சிருச்சு. இனிமே கொறைச்சுக்கறேன் தல.

      உங்களுக்கு பிடிக்காத ஜானர் பத்தி எழுதி இருந்தாலும், ஆதரவு தந்து உற்சாகப்படுத்தி இருக்கீங்க.. மிக்க நன்றி தல.

      Delete
  3. சூப்பரப்பு... தொடர்ந்து எழுதுங்க.. சொல்றதுக்கு ஒன்னும் இல்ல எல்லாத்தையும் நீங்களே சொல்லீட்டிங்க
    இந்த primer படத்த முடிச்சா தெளிவா நமக்கு விளங்குறமாதிரி எழுதுங்க... நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ விதுஷ்,

      மிக்க நன்றி நண்பா. ப்ரைமர் படம் பத்தி எழுதனும்னா அதுக்கு தனியா ஒரு தொடர்பதிவே எழுதனும்.. சுருக்கமா எழுத முயற்சி பண்றேன்.

      உங்க வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...!!

      Delete
  4. கலக்கி சூப்பர் பாஸ்,

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் பாஸ்..

      உங்க வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி..!!

      Delete
  5. super andiswamy , hana enna padikum pothu konjam thala sutthutu :P

    ReplyDelete
    Replies
    1. அது போகப்போக பழகிரும்.. கவலைப்படாதீங்க.. :)
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!!

      Delete
  6. உங்களை உங்களை உங்களை தான் சார் நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்
    இப்படியெல்லாம் யாராவது எழுத மாட்டாங்களா என்று ஏங்கிட்டு இருந்த எனக்கு நீங்க ஒரு அட்சய பாத்திரம், வரபிராசாதம், என்ன ஒன்னு இப்படிலாம் நீங்க எழுதறத நிறுத்திட்டா ஓடற பஸ் லாரி ட்ரைன் முன்னாடி ஓடி போயி முட்டனும்ன்னு தோணும்..அதனால நிப்பாட்டாதீங்க நிப்பாட்டாதீங்க, குறியீடு பத்தி சொன்னீங்க பாருங்க அது தான் சார் செம வாய்ப்பே இல்ல அவ்வளவு அழகா ரசிச்சு இருக்கீங்க
    அதெல்லாம் ஒரு நோயா கூட இருக்கலாம் சொல்ல முடியாது..என்ன இருந்தாலும் கதாநாயகியை பற்றி நீங்க அப்படி சொல்லிருக்க கூடாது அதனால தான் சொல்லறேன் தமிழ்நாட்டுக்கும் ஆம் ஆத்மி கட்சிதான் வரணும் அவங்க படம் எடுத்தா தான் அது சரியா இருக்கும்
    நீங்க சொன்னதால இந்த படத்தை நான் நாளைக்கே பார்க்க போறேன்

    என்னது புரியலையா கேடிகளா நீங்க சொன்னது மட்டும் என்னயா புரிஞ்சு எனக்கு
    இடுந்தாலும் சும்மா சொல்லகூடாது பாஸு பின்னி பெடலேடுதுட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. ஒரு குரூப்பாத்தான்யா கிளம்பியிருக்காய்ங்க..!! ஏன் இந்தக் கொலவெறி.. அவ்வ்வ்.. :)

      Delete
  7. நண்பா உங்க பதிவ தற்செய்லாத்தான் பாத்தேன். இன்டெர்ஸ்டெல்லர் படம் பாத்துட்டு கொஞ்சம் கொளப்பமா இருந்ததால கூகுள்ல தமிழ் விமர்சனம் எதாவது கெடைகுமான்னு தேடினப்போதான் உங்க ப்ளாக் மாட்டுச்சு...

    //ப்ளாக் ரீடரா ஒரு சின்ன suggestion. நீங்க பிராக்கெட்ல எழுதுற உங்களையே கலாய்ச்சு) வசனங்கள் புதுசா படிக்க வரவங்களுக்கு ஒரு மாதிரியான ஆயார்ச்சியை குடுக்கும். உங்களை நல்ல தெரிஞ்ச நண்பர்கள் ரசிப்பாங்க, பட் நம்ம blog படிக்கிறது 95% unknown ரீடர்ஸ் தான்// இது மேல ஒரு நண்பர் கமென்ட் பண்ணது...ஆனா என்னோட suggestion என்னன்னா, தயவு செய்து உங்க எழுத்து நடைய மாத்தாதீங்க...

    இப்போதான் உங்க ஒவ்வொரு பக்கத்தையும் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்...ரொம்ப அருமையா எழுதுறீங்க. தொடர்ந்து படிப்பேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊக்கத்துக்கும் கமெண்டுக்கும் மிக்க நன்றி நண்பா...!! தொடர்ந்து எழுத முயற்சி பண்றேன்..!!

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *