Jul 14, 2013

Dead Alive(1992) (18+) - உவ்வே..வ்வே..!!


ஹார்ட் டிஸ்க்ல பாக்காத படங்கள் இன்னும் நிறைய இருக்கு. இருந்தாலும் டெய்லி டவுண்லோடு போடறத நிறுத்துறது கிடையாது. அப்பிடி ஒரு நாள், என்னா படம் டவுண்லோடு போடலாம்னு யோசிச்சுக்கிட்டே ஐ.எம்.டி.பி. ய சுத்தி சுத்தி வந்துகினு இருந்தப்போ இந்தப்படம் கண்ணுல பட்டது. டைரக்டர் யாருனு பாக்க சொல்லோ நம்ம பீட்டர் ஜாக்சன். சரி என்னோட ரொம்ப ஃபேவரிட்டான ”லார்ட் ஆஃப் த ரிங்ஸ்” சீரீஸ் எடுத்த ஆளாச்சே. அவரோட ஆரம்பகால படம் இது, நல்லாருக்கும்னு நினச்சு டவுண்லோடிட்டேன். அப்ப ஆரம்பிச்சது எனக்கு வினை..


எனக்கு இந்த சோம்பி படங்கள்னா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல ”ரெசிடென்ட் ஈவில்” முதல் பாகம் பாத்துட்டு வேர்த்து விறுவிறுத்துப்போனேன். ரொம்ப பிடிச்சுப்போயி, டிவிடி கடைக்குப்போயி இந்த மாதிரியே எதுனா படம் இருந்தா கொடுங்கனு தேடிப்பார்த்து படங்கள் வாங்கிட்டு வந்து பாத்தேன். "Dawn of the Dead (2004)", "Land of the Dead (2005)", "28 Days Later... (2002)", "Underworld (2003)", Resident Evil-ன் மத்த பாகங்கள், அப்புறம் நீங்க கேள்வியே பட்டிருக்காத மூணாந்தர,ஏழாந்தர சோம்பி படங்கள் மொதக்கொண்டு அப்பிடி பாத்தவைதான். அதிலும் சோம்பி காமெடி படம்னா இன்னும் ரொம்ப பிடிக்கும். உதாரணத்திற்கு Shaun of the Dead (2004), Zombieland (2009) இந்த ரெண்டு படங்களையும் சொல்லலாம். ரெண்டுமே வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. சோம்பிக்கு சோம்பியும் ஆச்சு, சிரிப்புக்கு சிரிப்பும் ஆச்சு. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

அதனால எந்தத்தயக்கமும் இல்லாம இந்தப்படத்த டவுண்லோடு பண்ணிட்டேன். ஏன்னா இதுவும் சோம்பி காமெடி வகையை சேர்ந்தது தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில லேட்டா எந்திரிச்சு (பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலை) பாக்க ஆரம்பிச்சேன். பாக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலயே அது எவ்ளோ பெரிய தப்புனு தெரிஞ்சு போச்சு. என்னத்தங்க சொல்றது ? கீழ இருக்கற இந்த வீடியோவ பாத்துட்டு வாங்க. மேற்கொண்டு பேசுவோம். (ஆனா ஒண்ணு, இப்பதான் சாப்பாடு சாப்பிட்டு இருந்தீங்கன்னா இந்த வீடியோவைப் பார்ப்பதை தவிர்ப்பது ரொம்ப நல்லது.)


என்னா ஃபுல்லா பாத்துட்டீங்களா ? சரி உங்க மானிட்டர தொடைங்க. நாந்தான் முன்னாடியே சொன்னேன்ல சாப்பிட்டுருந்தா பாக்காதிங்கனு. இப்ப பொலம்பி என்ன பண்றது ? என்னாது இந்த வீடியோ பாத்தும் உங்களுக்கு வ்வே வரலியா ? பலே கில்லாடியான ஆளுதாம்பா நீ..!!

நல்லவேளை நான் அன்னிக்கு காலையில சாப்பிடலை. இல்லன்னா என் மானிட்டரும் நாறியிருக்கும். ஆனா இதுல இன்னொரு சோகம் என்னன்னா அன்னிக்கு ஃபுல்லா என்னால சாப்பிட முடியலை. சாப்பாட்ட பாத்தாலே இந்த சீன்தான் ஞாபகம் வருது. என்னா பண்றது ? சாப்பிட்டுட்டு பாத்தாலும் தண்டனை. சாப்பிடாம பாத்தாலும் தண்டனைனா ஒரு மனுஷன் என்னதான்யா பண்ணுவான் ? ஆனாலும் ஒரு வெறியில(!) முழுப்படத்தையும் பாத்துட்டேன்.(அவார்டு கொடுங்கப்பா இவனுக்கு)

கதைனு ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. பாத்து சலிச்ச அதே சோம்பி கதை. லியோனல் தன்னோட அம்மாவை ரொம்ப மதிக்கிற, என்ன சொன்னாலும் கேக்குற ஒரு பயந்தாங்கொள்ளி பையன். ஒரு பொண்ணுக்கும் இவனுக்கும் காதல் வருது. இது அவனோட அம்மாக்கு பிடிக்கலை. ஒரு நாள் லியோனலும் அவன் காதலியும் ஜூ(Zoo)-வுக்கு போறாங்க. இவங்கள ஃபாலோ பண்ணி லியோனலோட அம்மாவும் வர்றா. எதிர்பாராத விதமா அங்க இருக்க ஒரு விசித்திர குரங்கு லியோனல் அம்மாவைக் கடிச்சு வச்சுடுது. அதனால பாதிக்கப்பட்டு, நாளாக நாளாக அவ ஒரு சோம்பியா மாறிட்டு வர்றா.

இதை தெரிஞ்சுகிட்ட லியோனல் அம்மாவை மத்தவங்ககிட்டருந்து பாதுகாக்கனும்னு நினச்சுகிட்டு யார்ட்டயும் சொல்லாம மறைச்சுடறான். ஆனா அவன் அம்மா அங்க வர்ற நர்ஸ கடிச்சு வச்சுடறா. அப்பிடியே கொஞ்ச கொஞ்சமா நிறைய பேருக்கு இந்த நோய் பரவுது. எல்லாரும் சோம்பிக்களா மாறுறாங்க. கடைசில லியோனலும், அவன் காதலியும் தப்பிச்சாங்களா இல்லியான்றத பல பல உவ்வே.. உவ்வேக்களுக்கு பிறகு சொல்லிருக்காங்க. அம்புட்டுதேன் கதை.


காமெடின்ற பேர்ல பல உவ்வே சீன்களைப் பாக்க முடியும். மேல பாத்த சீனுக்கே உங்களுக்கு உவ்வே வந்துருச்சுன்னா தயவுசெய்து முழுப்படத்தப் பாக்காதீங்க. உங்க குடல் முழுக்க வெளில வந்துரும். அப்புறம் என்னை குறை சொல்லக்கூடாது. பீட்டர் ஜாக்சனும், அவரோட மனைவியும்(பார்ட்னர்) சேர்ந்து இந்தப்படத்துக்கு திரைக்கதை எழுதி இருக்காங்க. நியூசிலாந்துல முழுப்படத்தயும் ஷூட் பண்ணிருக்காரு. வெறும் 3 மில்லியன் டாலர் பட்ஜெட்ல எடுத்த படம் இது (முக்காவாசி தக்காளி சட்னி வாங்கறதுக்குதான் செலவு பண்ணிருப்பாய்ங்க). ஆனா பிரமாண்டமா தெரியுற வகையில எடுத்துருக்காங்க. (வாந்தி எடுக்க வைக்கிறதுக்கு இவ்ளோ பிரமாண்டமா ?!)

ஆனா போட்ட காச கூட எடுக்கலனு விக்கி சொல்லுது. இந்தப் படத்தோட Uncut வெர்ஷன பல நாடுகள்ல தடை பண்ணிட்டாங்களாம். ஹெவியா கட் பண்ணதுக்கப்புறம் தான் R Rated கொடுத்து வெளியிட்டுருக்காங்க. (கிட்டத்தட்ட 17 நிமிஷம் கட் பண்ணாய்ங்களாம்). அப்பறம் "லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ்" பிரபலமான பிறகு தான் இந்தப்படமும் எல்லாருக்கும் தெரிய வந்திருக்கு. (எல்லாரும் காறி வாந்தி எடுத்துருப்பாய்ங்க)

படம் முழுக்க தக்காளி சட்னி தான் (Fake Blood). க்ளைமாக்ஸ்ல லியோனலோட அம்மா ஒரு பெரிய ராட்சத உருவமா மாறிடுவா. அப்போ அது வயித்துல இருந்து தக்காளி சட்னி கொட்டறது மாதிரி ஒரு சீன் வரும். அந்த ஒரு சீனுக்கு மட்டும் 300 லிட்டர் தக்காளி சட்னி யூஸ் பண்ணிருக்காங்க. இது வரைக்கும் வந்த படங்களிலேயே இந்தப்படம் தான் அதிகமான தக்காளி சட்னியை உபயோகித்த படமாம்.

படத்துல ரெண்டு சோம்பிகள் மேட்டர் பண்ணி அவங்களுக்கு ஒரு சோம்பி குழந்தை பிறக்கும். அந்த குழந்தையை வச்சு ஒரு காமெடி சீன் வரும். இந்தப்படத்துல பீட்டர் ஜாக்சனுக்கு ரொம்ப பிடிச்ச சீன் அதுதானாம். கீழ அந்த சீன் இருக்கு பாருங்க. எவ்ளோ சிக்(Sick)கான ஆளா இருந்தா இந்த மாதிரி காமெடி சீன் வச்சுருக்க முடியும்னு.


எனக்கு என்னா ஆச்சரியம்னா, படம் பாக்குற நமக்கே இப்பிடி உவ்வே வருதே.., படத்துல நடிச்ச நடிகர்கள்லாம் எப்டி நடிச்சுருப்பாங்கனு தான். அதுலயும் க்ளைமாக்ஸ் முடிஞ்சபிறகு ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரு மூஞ்சி, உடம்பெல்லாம் ஒரே தக்காளி சட்னியா இருக்கும். அப்போ ரெண்டு பேரும் ஒரு கிஸ்ஸ போடுவாங்க பாருங்க. வ்வே..வ்வ்வே..!! சகிக்கலை..!!

இன்னொரு சுவாரசியமான விஷயம் தெரியுமா? படத்த தியேட்டர்ல பாத்த முக்காவாசி பேரு அங்கயே வ்வ்வே எடுத்து தியேட்டரையே நாறி நசநசக்க வச்சுட்டாங்களாம். அதனால படம் பாக்க வர்ற எல்லாருக்கும் ஒரு வாமிட் பேக் ஒன்னு கொடுத்து தான் உள்ளே விட்டாங்களாம். வ்வே வந்தா அந்த பேக்ல எடுத்துட்டு அப்பறம் வெளில வந்து போட்டுறனும்னு ஆர்டர். 3டி படத்துக்கு கண்ணாடி கொடுக்கற மாதிரி, உவ்வே படத்துக்கு வாமிட் பேக்..!! என்னாமா யோசிச்சுருக்கானுங்க..!!

கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லக் கடமைப்பட்டுருக்கேன். உங்களுக்கு தக்காளி சட்னி அல்லது தக்காளி ஸாஸ் ரொம்ப பிடிக்கும்னா இந்தப்படத்த தவிர்த்துடுங்க. மீறிப்பாத்தீங்கன்னா அப்பறம் வாழ்க்கைல மறுபடியும் உங்களால தக்காளி சட்னி சாப்பிடவே முடியாது யோசிச்சுக்கங்க. இந்தப்பதிவு ஒரே கவுச்சியா இருக்கற மாதிரி ஃபீல். இன்னும் அந்த வ்வே ஃபீல்ல இருந்து வெளில வர முடியலை. நீங்க பாத்ததுலயே இந்த மாதிரி வ்வே ஃபீல் கொடுத்த படம் எதுனு ஒரு பின்னூட்டத்த போட்டுட்டுப் போங்க.

Dead Alive - உவ்வே எடுக்க ஆசைப்படுபவர்களுக்கு மட்டும்..!!

12 comments:

  1. தல,
    எனக்கு ஜோம்பி படமே அலர்ஜி, அதுல வேற இந்த மாதிரி ரொம்பவே உவ்வே படங்களை கண்டிப்பா அவாயிட் பண்ணிருவேன். பீட்டர் ஜாக்சன் இந்த மாதிரி படம் எல்லாம் எடுத்து இருக்காரா..?? பெரிய ஆச்சிரியம், அவரோட ஆரம்ப கால படங்களான "Heavenly Creatures" முடிஞ்சா பாருங்க. ரொம்பவே நல்ல இருக்கும். கேட் வின்செட் நடிச்ச படம்.
    நான் கில் பில் படம் தான் தக்காளி சட்டினியில ரெக்கார்ட் பண்ணின படம்ன்னு நினைச்சு இருந்தேன். :):)

    அப்புறம் ஒரு சின்ன Suggestion...பதிவோட லேபல்ல "சினிமா" "திரைவிமர்சனம்" இந்த ரெண்டு Tag add பண்ணிக்காங்க. தமிழ்மணத்துல அது ரொம்பவே யூஸ் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. தல,

      இந்தப்படம் பாத்ததுல இருந்து பீட்டர் ஜாக்சனோட ஆரம்பகாலப் படங்கள் எல்லாத்தயுமே அவாய்ட் பண்ணிடலாம்னு நினச்சேன். "ஹெவென்லி க்ரியேச்சர்ஸ்" நல்லாருக்கும்-ங்கறீங்க. பாத்துடுவோம் (கேத் வின்ஸ்லட்-காகவச்சும்). கில்பில்-ல வர்ற ப்ளட்லாம் இந்தப்படம் கூட கம்ப்பேர் பண்ணா சொம்மா தல. இதுல உண்மையிலேயே அந்தக்குழந்தையை ஒரு மிக்ஸில போட்டு அரைப்பாய்ங்க. இன்னும் என்னென்ன கொடூரமோ பண்ணுவாய்ங்க. ஃபுல்லா உவ்வே தான். அலர்ஜி வேறன்றீங்க. இந்தப்படம் சைடு கூட திரும்பிராதீங்க.

      திரைவிமர்சனம் லேபிள் ஆல்ரெடி இருக்கு தல. இப்போ சினிமா ஆட் பண்ணிக்கறேன்.மிக்க நன்றி தல.

      Delete
  2. வீடியோ எல்லாம் பாக்கல! அந்த ஸ்டில்லே போதும்!

    Dawn of the Dead ன்னு 98ல ஒரு சோம்பி படம் பாத்துட்டு திரிசிருக்கேன். :-)

    ReplyDelete
    Replies
    1. ஜி,

      வாங்க ஜி. முதல் முறையா இங்கே வந்துருக்கீங்க. நட்புக்கரம் நீட்டி வரவேற்கிறேன். என்னை உங்களின் நட்பு வட்டத்திற்குள் இணைத்ததற்கு மிக்க நன்றி.

      ஸ்டில்லுக்கேவா ? அப்ப இந்தப்படம் இருக்கற பக்கம் திரும்பிக்கூட பாத்துராதிங்க.

      அடிக்கடி வாங்க. மீண்டும் மிக்க நன்றி.. :)

      Delete
  3. hostel படம் பார்த்ததில் இருந்த்து இந்த மாதிரி படங்கள் பாக்குறதுக்கு முயச்சி பன்னறதே இல்ல

    ReplyDelete
    Replies
    1. நண்பா லியோன்,

      ஹாஸ்டல் படத்தை விடவும் அதிக ரத்தத்தை சிந்தியிருக்கிறார்கள். ஹாஸ்டல் படம் பாக்கும்போது ஒரு மாதிரி சிக் ஃபீல் கிடைக்கும். ஆனால் வாமிட் வராது.

      இது காமெடிப்படம். ஆனால் உங்களை எப்படியாவது வ்வே எடுக்க வச்சிரனும்னே பல சீன்களை வச்சுருக்காய்ங்க. உங்க குழந்தை மனசுக்கு, இந்தப்படம் பாக்காம இருக்கறதே நல்லது. :)

      Delete
  4. சோம்பி படம் என்று தெரியாம பத்தோட பதினொன்றா டவுன்லோட் பண்ணி ஹாட்டிஸ்க்ல வச்சிருக்கிற படம். கண்டிப்பா பாத்திடனும். ஏன்னா எனக்கு சோம்பி படங்கள் ரொம்பவே பிடிக்கும்...

    நன்றி தல, அறிமுகப்படுத்தியதற்கு :)

    ReplyDelete
    Replies
    1. நண்பா மதுரன்,

      நட்புக்கும் அறிமுகத்துக்கும் மிக்க நன்றிகள்.
      சோம்பி படம் பிடிக்கும்னா கண்டிப்பா பாருங்க. ஆனா எதுக்கும் ஒரு வாமிட் பேக் பக்கத்துலயே வச்சுக்கங்க. :) :)

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதுரன். அடிக்கடி வாங்க..!!

      Delete
  5. ரொம்ப பாதிக்க பட்டது போல இருக்கு

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஹேமந்த்,

      ரொம்பவே பாதிக்கப்பட்டுட்டேன்..:(
      என்ன இருந்தாலும் சாப்பாடு மிகவும் முக்கியமில்லையா ?!! :)

      Delete
  6. இந்த படம் பார்த்து மறக்கவே ரொம்ப நாள் ஆயிடுச்சி (கிட்டத்தட்ட ஆறு மாசம்) மறுபடியும் நியாபக படுத்தியிருக்கீங்க.
    //ஹார்ட் டிஸ்க்ல பாக்காத படங்கள் இன்னும் நிறைய இருக்கு. இருந்தாலும் டெய்லி டவுண்லோடு போடறத நிறுத்துறது கிடையாது.//
    சேம் பிளட் ஆயிரத்துக்கும் மேல படங்கள் வச்சிருக்கேன்... ஆனா மனசு புது புது ஹாரர் மற்றும் கோர் (கொடூர) படங்களை நோக்கியே செல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு தடவை பாக்கக்கூடாதுனு நினைக்கற படங்கள்ல இதுவும் ஒன்னு. ஒருதடவை அனுபவிச்சதே காலத்துக்கும் போதும்ங்கற அளவுக்கு இருக்கு.

      நீங்களுமா? எனக்குலாம் இப்போ ஒரு நாளைக்கு கொறைஞ்சது 6-8 படம் டவுன்லோட் பண்ணலினா அன்னிக்கு தூக்கம் வர மாட்டிங்குது. வியாதி முத்திப்போச்சு. :) :P

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *