Nov 12, 2013

1 - The Blood And Icecream Trilogy


இந்த வருடம், ஒரேமாதிரி கதையம்சத்துடன் வெளிவரும் படங்களின் வருடம் போலிருக்கிறது. 1.Oblivion, After Earth 2.Olympus Has Fallen, White House Down என்று இந்த வருடத்தில் மட்டும் இரண்டு ஜோடிப்படங்கள் ஆல்ரெடி ரிலீஸ் ஆகியுள்ளது. இப்போது இந்த ஜோடிப்பட்டியலில், This is the End படத்தோடு The World's End படமும் இணைந்துவிட்டது. இரண்டிலும் மையக்கரு கிட்டத்தட்ட ஒன்று தான். உலகம் அழியும்போது நண்பர்களோடு இருந்தால் என்ன ஆகும் ? அதுதான் இந்த இரண்டு படங்களின் மையக்கதையும்.

பொதுவாகவே அமெரிக்கன் காமெடிப் படங்களைவிட பிரிட்டிஷ் காமெடிப் படங்கள் அதிக நகைச்சுவையுடன் இருக்கும் என ஒரு கருத்து உண்டு. அதில் நானும் உடன்படுகிறேன். பிரிட்டிஷ் காமெடிப்படங்கள் அமெரிக்க காமெடிப் படங்களை விட ஒருபடி மேலாக இருக்கும். அதேபோல சற்று புத்திசாலித்தனமான காமெடியாகவும் இருக்கும். அதற்கு உதாரணம் தான் இந்தப்படம். இந்தப்பதிவில் இந்தப்படத்தைப் பற்றி மட்டுமில்லாமல் இப்படத்தின் மும்மூர்த்திகளைப் பற்றியும் பார்ப்போம். 

1.எட்கர் ரைட் (Edgar Wright) :

முதலில் இந்தப்படத்தின் இயக்குனர் எட்கர் ரைட் (Edgar Wright) - ராபர்ட் ராட்ரிகய்ஸ்-க்கு அடுத்து எனக்குப் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குனர் இவர். (இந்த லிஸ்டில் கய் ரிட்சியும் உண்டு) எட்கர் எடுத்த படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். மொத்தமாகவே கடந்த 20 வருடங்களில் 5 படங்களைத்தான் எடுத்துள்ளார். ஐந்துமே காமெடிப்படங்கள். அதுவும் சாதாரண ஸ்லாப்ஸ்டிக் வகைக் காமெடிப் படங்கள் இல்லை. ஹாலிவுட்டின் ஒவ்வொரு ஜானரையும்(Genre) பகடி செய்து எடுத்த படங்கள். Scott Pilgrim vs. the World  இன்னும் பார்க்கவில்லை. அதைத்தவிர்த்து இவர் எடுத்த மற்ற 4 படங்கள்,

A Fistful of Fingers (1995) - இந்தப்படத்தின் பெயரை எங்கோ கேட்டதுபோல் உள்ளதா ? A Fistful of Dollars (1964) வெஸ்டர்ன் படம் நினைவிருக்கிறதா ? செரிஜியோ லியோன் மற்றும் என்னியோ மோரிக்கோனின் கைவண்ணத்தில் வெளிவந்த காலத்தால் அழிக்க முடியாத டாலர்ஸ் ட்ரைலாஜியின் முதல்படம். அதே போல டைட்டில் வைத்துக்கொண்டு வெஸ்டர்ன் படங்களைப் பகடி செய்த படம் தான் A Fistful of Fingers (1995). 

Shaun of the Dead (2004) - சோம்பி படங்களைப் பகடி செய்த படம். காலங்காலமாக சோம்பிகளை வைத்து எடுக்கப்பட்ட ஹாரர் படங்களையே பார்த்து போரடித்துப் போயிருந்த ரசிகர்களுக்கு, அதை பகடிசெய்த விதம் மிகவும் பிடித்துப்போனது என்றே கூறவேண்டும். சோம்பி ஹாரர் படங்களின் வரிசையில் இந்தப்படம் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப்படத்திலிருந்து தான் மும்மூர்த்திகளில் மற்ற இருவரான Nick Frost, Simon Pegg ஆகிய இருவரும் இணைந்தனர்.

Hot Fuzz (2007) - போலிஸ் ஆக்சன் படங்களைப் பகடி செய்த படம். இதிலும் மும்மூர்த்திகளும் இணைந்தனர். The World's End (2013) - சயின்ஸ்பிக்சன், ஏலியன் படையெடுப்பைப் பகடி செய்த படம்.

எட்கர் ரைட் படங்களில் ஒருசில விஷயங்கள் பொதுவானவையாக இருக்கும். உதாரணத்திற்கு க்ளைமாக்ஸ்க்கு முந்தைய முக்கியமான சீன் பாரில் நடைபெறுவதாக இருக்கும். Shaun of the Dead (2004) படத்தில் பாரில்தான் க்ளைமாக்ஸ் சண்டை நடக்கும். அதேபோல Hot Fuzz (2007) படத்திலும் வரும். The World's End (2013) படம் முழுவதுமே பாரில்தான் நடைபெறும். அது அவரின் பாணி.

அதுதவிர மேக்கிங்கிலும் சில பொதுவான அம்சங்கள் இடம்பெறும். உதாரணத்துக்கு ஃபாஸ்ட் ஆக்சன் ஸ்டைல் எடிட்டிங் இருக்கும். கதாபாத்திரங்கள் செய்யும் ஆக்சன்களை, ஒருசில ஷாட்களில் வேகமாகக் காமிப்பது. இதில் உடனே எனக்கு ஞாபகம் வருவது கய் ரிட்சி படங்கள் தான். உதாரணத்துக்கு Snatch (2000) படத்தில் வரும் இந்த சீனைக் கவனியுங்கள். ஒரு கதாபாத்திரம் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வருவதை ஒருசில ஷாட்களில் காண்பித்திருப்பார்.


அதேபோல எட்கரின் Shaun of the Dead படத்தில் வரும் இந்தக் காட்சியைக் கவனியுங்கள். படுவேகமான கட்(Cut)கள் இருக்கும்.


Hot Fuzz (2007) படத்தில் வரும் இந்தக்காட்சியையும் பாருங்கள்.


இதுபோல படம் முழுவதும் பல காட்சிகளை இப்படி வேகமான எடிட்டிங்கினால் காண்பித்திருப்பார். அடடா என்னவொரு ஸ்டைல் !! ஆனால் இதைவிட ஸ்டைலான இன்னொரு காட்சி உள்ளது. அது வெறும் போட்டோவிலேயே கதை சொல்லும் ஸ்டைல். Run Lola Run (1998) படத்தின் இந்தக்காட்சியைக் கவனியுங்கள். விளக்கமே தேவையில்லை.


இதைத்தவிர எட்கர் அடிக்கடி உபயோகப்படுத்தும் பல டெக்னிக்குகள் உள்ளன. Whip Pan மற்றும் Crash Zoom போன்றவற்றை அவரது படங்களில் நிறையப் பார்க்கலாம். Whip Pan என்பது ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையில் வரும் ட்ரான்சிஷன் போன்றது. கேமராவை வேகமாக அடுத்த காட்சி இருக்கும் திசையில் நகர்த்தினால் இந்த எஃபக்ட் வரும். இந்த வகையில் உடனே எனக்கு ஞாபகம் வருவது பால் தாமஸ் ஆண்டர்சன் தான். ஏற்கனவே இவரின் படங்களில் வரும் நீளமான காட்சிகளைப் பற்றி இந்தப்பதிவில் பார்த்திருக்கிறோம். அந்தக்காட்சிகளிலேயும் இந்த எஃபக்டு வரும். மேலும் புரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.


இதுபோன்ற ட்ரான்சிஷன் எஃபக்ட் எட்கரின் அனைத்து படங்களிலும் பல இடங்களில் வரும் அதேபோல Crash Zoom. முக்கியமான திருப்பத்தின் போதோ, அல்லது கதாபாத்திரத்தின் அதிர்ச்சி அல்லது ஆச்சரியத்தை உணர்த்தவோ சம்பந்தப்பட்ட கதாபாத்திரம் படுவேகத்தில் ஜூம் செய்யப்படும். அதுவே Crash Zoom. உதாரணத்துக்கு இந்தக்காட்சியைப் பாருங்கள்.


இதில் ஜூம் மட்டுமில்லாமல், Whip Panம் உபயோகிக்கப்பட்டிருக்கும். இதுபோல பல காட்சிகள் எட்கர் எடுத்திருப்பார். அதேபோல கதாபாத்திரங்கள் ஏதேனும் ஒரு தடுப்புவேலியை தாண்ட முயன்று முடியாமல் தோற்றுப்போகும் காட்சிகளும் இவர் படங்களில் சகஜம். ஒவ்வொரு படத்திலும் ரசிகர்கள் இந்தக்காட்சிக்காகக் காத்திருப்பார்கள். கிட்டத்தட்ட இந்தக்காட்சி இவருடைய ட்ரேட்மார்க்காகவே ஆகிவிட்டது.  Shaun of the Dead, Hot Fuzz, The World's End மூன்று படங்களிலும் வரும் இந்தக்காட்சியைப் பாருங்கள்.


இதுதவிர அத்தனை படங்களிலும் காமெடியையே பிரதானமாக வைத்து கதையை நகர்த்தியிருப்பார். நகைச்சுவையில் Deadpan humor அல்லது Dry humor என்று ஒருரகம் உண்டு. அதாவது முகத்தில் எந்தவித எக்ஸ்பிரஷனும் கொடுக்காமல், பாடி லாங்வேஜ் மாற்றாமல் சீரியசாகக் காமெடி பண்ணுவதற்கு டெட்பான் காமெடி என்று பெயர். இதில் காட்சியமைப்பு தான் மிக முக்கியமான பங்குவகிக்கும். இந்தவகை காமெடி காட்சிகள் இவரின் படங்களில் நிறைந்து இருக்கும்.

Shaun of the Dead (2004) படத்தில் வரும் இந்தக்காட்சியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சியும் கூட. நீங்களும் ஒருதடவை பாருங்கள்.


இப்படிப் பல காட்சிகளை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இங்கே ஒரு சுவாரசியமான ட்ரிவியா என்னவென்றால் இவர் ஆக்சன் மற்றும் சோம்பி படங்களின் தீவிர விசிறியாம். அதிலும் George A. Romero வினுடைய சோம்பி படங்களுக்கு அதிதீவிர விசிறி. Shaun of the Dead (2004) படத்தில் பல இடங்களில் ஜார்ஜ் ரொமீரோவின் படங்களைப் பற்றிய குறிப்பு வரும். ஜார்ஜின் Land of the Dead (2005) படத்தில் எட்கரும், சைமன் பெக்-கும் ஒரு சிறிய காட்சியில் கேமியோவாகத் தோன்றுவர்.

இந்த மும்மூர்த்திகளும் இணைந்து மொத்தம் மூன்று படங்கள் தந்திருக்கின்றனர். ஆனால் Shaun of the Dead படத்திற்கு முன்பே 1999ல் வெளிவந்த Spaced (1999) என்னும் டிவி சீரிசிலேயே இந்த மூன்றுபேரும் இணைந்துவிட்டனர்.

க்வண்டினும், ராபர்ட் ராட்ரிகய்சும் இணைந்து Grindhouse என்ற பெயரில் இரண்டு படங்களை எடுத்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் சில ஃபேக் ட்ரெயிலர்களும் வெளியிடப்பட்டது. அதில் ஒன்றான Machete தற்போது உண்மையிலேயே படமாக எடுக்கப்பட்டதும் தெரிந்த விஷயமே. அதேபோல எடுக்கப்பட்ட இன்னொரு ட்ரெயிலர் Don't. இதை எடுத்தது ஹாரர் படங்களின் தீவிர விசிறியாகிய நமது எட்கர் தான். அந்த ட்ரெயிலரையும் பார்த்து விடுங்கள்.


தற்போது அடுத்ததாக மார்வலுடன் இணைந்து "Ant Man" படத்தை எடுத்து வருகிறார். தன்னுடைய ஸ்டைலிஷ் மேக்கிங்கால் தனக்கென தனிரசிகர் வட்டத்தைப் பிடித்த இவர் The World's End படத்துடன் கார்னிட்டோ ட்ரைலாஜியை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார். இந்த மூவரும் இணைந்து எடுத்த இந்த மூன்று படங்களுக்கு Three Flavours Cornetto trilogy என்று பெயர் வைத்துள்ளனர்.

Shaun of the Dead - strawberry-flavoured Cornetto - Zombie parody
Hot Fuzz - blue original Cornetto - Police Action Parody
The World's End - green mint chocolate chip flavour - Sci-Fi Parody


ஒவ்வொரு படத்தின் பட்ஜட்டும் அதற்கு முன்வந்த படத்தைவிட அதிகமாம். அதேபோல வசூலும். இந்தப்படத்தோடு இவர்களின் ட்ரைலாஜி முடிவுக்கு வந்துவிட்டது என்பது சற்றே வருத்தம் தான். வேறு ஒரு வித்தியாசமான படத்தில் இவர்களை மீண்டும் பார்க்கலாம் என்று நம்புவோம்.

இந்தப்பதிவு சற்றே நீண்டுவிட்டதால் மற்ற இருவர்களைப் பற்றியும் The World's End படத்தைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம். அடுத்த பதிவை இன்றிரவு அல்லது நாளை காலையில் பதிவிடுகிறேன். நன்றி.

                                                                                                                                       அடுத்த பதிவு
நன்றி : IMDB, Wikipedia, YouTube
தொடரும்-

14 comments:

  1. வெல்டன்... இப்படியொரு கலெக்‌ஷன் ஆப் தகவல்ஸ் மற்றும் இயக்குனர் பற்றியும் படங்கள் பற்றியும் கூறியிருப்பது அருமை. அடுத்த பதிவில் படத்தை பற்றி எதிர்ப்பார்க்கின்றேன்... அதுசரி This is the End க்கும் இதற்கும் என்ன ஒற்றுமை? கிட்டே வைக்க முடியாது இல்ல!

    ReplyDelete
    Replies
    1. //This is the End க்கும் இதற்கும் என்ன ஒற்றுமை? கிட்டே வைக்க முடியாது இல்ல!//

      ரெண்டு படத்துக்கும் ஒன்லைன் ஸ்டோரி ஒன்னுதானே..!! அதவச்சி தான் சொன்னேன்.. மத்தபடி கிட்ட வைக்க முடியாது தான் :) :)

      Delete
  2. தல நீங்களும் எல்லா படத்தையும் பற்றி பிரிச்சி மேஞ்சிடுறீங்க இதுல Shaun of the Dead ,Hot Fuzz மட்டும் தான் பார்த்து இருக்கேன் மத்தபடி நீங்க கூறியவர்கள் பற்றி இப்போ தெரிஞ்சிட்டேன் நன்றி :) அது சரிங்க எல்லா போஸ்டும் தொடரும்னு போய்ட்டே இருக்கீங்க!!!! வாழ்த்துகள் இன்னும் பல தொடர்கள் எழுத :P

    ReplyDelete
    Replies
    1. கார்னிட்டோ ட்ரைலாஜில இதுதான் கடைசி.. இதையும் பாத்துடுங்க தல..!!
      தொடரும் போட எனக்கு விருப்பமில்லதான். ஒரே பதிவில எல்லாத்தயும் எழுதிடலாம்.. ஆனா நீங்க ஓடிருவீங்களே.. :P

      Delete
  3. படங்கள் இன்னும் பார்கவில்லை..விமர்சனம் அருமை..யாரோ 2 பேர்தானே படிக்க போரங்கன்னு இல்லாம...விரிவான எழுத்து..அருமையான நடை...

    கணேஷ்குமார்.ராஜாராம்.
    :)

    ReplyDelete
    Replies
    1. படங்கள் அத்தனையும் பாருங்க. முக்கியமா 'Shaun of the Dead'. பாத்துட்டு வந்து இந்தப்படங்கள பாக்கசொன்னதுக்கு எனக்கு நன்றி சொல்லுவீங்க பாருங்க..!! :)

      //யாரோ 2 பேர்தானே //
      இந்த மாபெரும் பதிவுலக மாமா மன்னனைப் பார்த்து இப்படிக் கூறியது கண்டிக்கத்தக்கது. பிரபஞ்சம் முழுவதும் உங்களை எதிர்த்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் நடத்தி அறவழிப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனது 700 கோடி வாசகர்கள்.. :P :)

      Delete
  4. இன்னைக்கு தான் பார்த்து முடிச்சேன் கார்னீட்டோ டிரையாலஜியை.. விரைவில் அவரது மற்றப் படங்களை பார்க்கனும் நண்பா.. அருமையான பதிவு...

    ReplyDelete
    Replies
    1. மற்றப் படங்கள் மிச்சம் ரெண்டு தான் இருக்கு நண்பா..!! அதையும் பாருங்க. நானும் பாக்கனும்.. :)

      Delete
  5. செம அனாலிசிஸ் தல... நிறைய தகவல்கள் அள்ளி தெளிச்சு இருக்கீங்க....அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கண்ணா,
      எல்லாம் வல்ல இணையம் இருக்க பயமேன்.. :) அடுத்த பதிவு பாதி எழுதி ட்ராஃப்ட்ல போட்டு வச்சிருந்தேன். ஆஃபிஸ் லேப்டாப், பர்சனல் லேப்டாப்னு மாத்தி மாத்தி யூஸ் பண்ணதுல எப்டியோ காணாமப் போயிருச்சி. அடுத்த பதிவு இப்போதான் டைப்பிக்கிட்டு இருக்கேன். சீக்கிரமே போஸ்ட் பண்றேங்னோவ்...

      Delete
  6. உங்க முயற்சி பாராட்டுக்குரியது...i am waiting...

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. :)

      அடுத்த பதிவு கூடிய சீக்கிரத்தில்.. கூகுள்காரன் என் அடுத்த பதிவ டெலீட் பண்ணிப்புட்டான்.. மறுபடியும் எழுதிக்கொண்டிருக்கிறேன். சீக்கிரமே போஸ்ட் செய்கிறேன்.

      நன்றி.. :)

      Delete
  7. naan unga thevira rasikan aaitan. officela free time kitakarapalam unga pathukalathan padikaran. athula naan pakatha padatha uadane download potturan. intha pathiva padicha udane "Shaun of the Dead" padatha pakanumnu thonuchi. next time torrent download link update panna romba nalla irukum konjam muyarchi chenchi parukalen....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தலைவா..!!

      உங்களுக்கு இந்த வலைத்தளம் ஏதொ ஒருவகையில யூஸ்ஃபுல்லா இருக்குனு நினைக்கறப்போ ரொம்ப சந்தோஷம். அப்றம் டாரண்ட் லிங்க்... அதை இங்கே வலைத்தளத்துல போடறதுக்கு எனக்கு கொஞ்சம் ஆட்சேபணை இருக்கு. அப்டி டாரண்ட் லிங்க் கொடுத்து, நாமளே எங்கரேஜ் பண்ணறது தப்புனும் தோணுது.

      இருந்தாலும், உங்களுக்கு எதுனா படம் டாரண்ட் லிங்க் வேணும்னா ஃபேஸ்புக்ல மெஸேஜ் பண்ணுங்க. கண்டிப்பா லிங்க் கொடுக்கறேன்.

      உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!!

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *